For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

டாப் 10 பட்டியலில் முதலிடம் பிடித்த சலார் - எப்படி தெரியுமா?...

02:00 PM Jan 28, 2024 IST | Web Editor
டாப் 10 பட்டியலில் முதலிடம் பிடித்த சலார்   எப்படி தெரியுமா
Advertisement

சலார் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி டாப் 10 பட்டியலில் முதல் இடத்தை பெற்றுள்ளது.

Advertisement

கடந்த ஆண்டு பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படங்களில் ஒன்று சலார். தெலுங்கில் உருவான இப்படம் மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டது.  பிரஷாந்த் நீல் இயக்கத்தில் முதன்முறையாக பிரபாஸ் மற்றும் பிரித்விராஜ் இணைந்து நடித்திருந்தனர். கே.ஜி.எப் வெற்றியை தொடர்ந்து சலார் வெளிவருவதால் இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில்,  இத்திரைப்படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.  ரசிகர்களின் எதிர்பார்ப்பை மட்டுமே பூர்த்தி செய்யும் வகையில்  அமைந்தது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு மற்றும் ஹிந்தியில் மட்டுமே நல்ல வரவேற்பை பெற்றது.  மற்ற  மொழிகளில் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இந்நிலையில்,  இதுவரை உலகளவில் ரூ. 550 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து சலார் திரைப்படம் ஜனவரி 12 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.  ஆனால் அன்று வெளியாகவில்லை. இதனைத் தொடர்ந்து, வரும் ஜனவரி 20 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியது. வெற்றிகரமான பயணத்தைத் தொடர்ந்து, இத்திரைப்படம் OTT தளத்தில் வெளியாகி இந்த வாரம் இந்தியாவின் டாப் 10 (படங்கள்) பட்டியலில் நம்பர் 1 இடத்தில் உள்ளது.

Tags :
Advertisement