For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘சலார்’ திரைப்படத்தின் வசூல் திடீர் சரிவு! -இரண்டாம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

01:23 PM Dec 24, 2023 IST | Web Editor
‘சலார்’  திரைப்படத்தின் வசூல் திடீர் சரிவு   இரண்டாம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா
Advertisement

 ‘சலார்’  திரைப்படத்தின் 2-ம் நாள் வசூலில் சரிவு ஏற்பட்டுள்ளது. 

Advertisement

2015-ம் ஆண்டு பேன் இந்தியன் மொழிகளில் வெளிவந்த பாகுபலி திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் பிரபாஸ்.  இதற்கு முன்பும் அவர் நிறைய தெலுங்கு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.  கேஜிஎஃப்-2 திரைப்படத்தை தொடர்ந்து,  இயக்குநர் பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடித்துள்ளார். பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் ஜெகபதி பாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  இந்த திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் டிச.22-ம் தேதி  உலக முழுவதும் வெளியாகியது.

இதையும் படியுங்கள்: முழு கொள்ளளவை எட்டிய மணிமுத்தாறு அணை – 1,000 கன அடி நீர் திறப்பு!

இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றாலும்,  வெளியான முதல் நாளிலேயே உலகளவில் ரூ.178.7 கோடி வசூல் செய்தது.  சலார் படம் இந்திய அளவில் ரூ.95 கோடி வசூல் செய்தது.  இதன் மூலம்,  2023-ம் ஆண்டில் இந்திய அளவிலும், உலகளவிலும் அதிக வசூல் செய்த இந்தியப் படம் எனும் சாதனையை படைத்தது.

இந்த நிலையில்,  சலார் திரைப்படத்தின் 2-ம் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.  நெகடிவ் விமர்சனங்கள் அதிகளவில் வந்ததால் சலார் திரைப்படம் இரண்டாம் நாளில் மிகபெரிய சரிவை சந்தித்து உள்ளது.  இப்படம் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.90 கோடி வசூலித்து இருந்த நிலையில், இரண்டாம் நாளில் வெறும் ரூ.55 கோடி மட்டுமே வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement