சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் சைஃப் அலிகான்!
பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் கடந்த ஜன.16ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் மும்பையில் உள்ள அவரது வீட்டில் அடையாளம் தெரியாத கொள்ளையனால் தாக்கப்பட்டார். இந்த சம்பவம் இந்தியா முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலில் சைஃப் அலிகான் படுகாயம் அடைந்த நிலையில் மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சைஃப் அலிகானை தாக்கிய நபரை கண்டுபிடிக்க 20 தனிப்படைகளை அமைத்த மும்பை காவல்துறை, 7 மணிநேரத்தில் குற்றவாளியை கைது செய்தது. விசாரணையில் குற்றவாளி வங்கதேசத்தை சேர்ந்த முன்னாள் மல்யுத்த வீரர் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சைஃப் அலிகான் இன்று வீடு திரும்பியுள்ளார். கொள்ளையனின் தாக்குதலில் பலத்த காயத்துடன் மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த சைஃப் அலிகான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.