Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"சைதாப்பேட்டை சிறுவன் உயிரிழப்பு- நாளை முதல் குழந்தைகள் இருக்கும் வீடுகளுக்கு ORS பவுடர் வழங்கப்படும்"" - பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் பேட்டி

02:57 PM Jun 30, 2024 IST | Web Editor
Advertisement

சைதாப்பேட்டையில் 11 வயது சிறுவன் குடிநீர் அருந்தி உயிரிழந்ததன் எதிரொலியாக நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் குழந்தைகள் இருக்கும் வீடுகளுக்கு இரண்டு ORS பவுடர் மற்றும் sig மாத்திரை வழங்கப்படும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்தார்.

Advertisement

சென்னை கிண்டி உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) வளாகத்தில் ஐஐடி
மெட்ராஸில் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, தமிழ்நாடு அரசின்
பொது சுகாதார மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குனரகம், சேப்பியன்ஸ் ஹெல்த்
பவுண்டேஷன் ஆகியவை இணைந்து மருத்துவ வல்லுநர்கள், மருத்துவர்களுக்கான "குறைந்த உப்பு உணவு"(உப்பு குறைப்பு மற்றும் குறைந்த உப்பு மாற்றீடுகள்) குறித்து
பயிலரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம்‌ பங்கேற்றார். உணவில் குறைந்த உப்பு பயன்பாடுகள் குறித்தும், உணவில்
அதிகளவில் உப்பு உட்கொள்வதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும்
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றினார். இந்நிகழ்வில் மருத்துவர்கள், மருத்துவ வல்லுனர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது :

"உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற நோய்கள் மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் மூலமாக கண்டறிந்து ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டாலும் அதை தடுக்கும் வகையில் உணவில் உப்பின் அளவை குறைத்து நோய்களிலிருந்து தற்காத்து கொள்வது குறித்து பயிலரங்கம் நடைபெறுகிறது.

இதையும் படியுங்கள் : “டாஸ்மாக்கில் தரம் இல்லை என்பதை அமைச்சரே ஒப்புக்கொள்கிறார்” – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

உணவில் உப்பு தேவையான அளவைவிட அதிகமாக பயன்படுத்துவதால் தான் பிரச்னைகள் ஏற்படுகிறது. அனைத்து வயதினரும் குறிப்பாக இளம்வயதில் இருந்தே உப்பு பயன்பாட்டை குறைக்க வேண்டும். ரத்தக்குழாய் பாதிப்புகள், எலும்பு தேய்மானம் , சிறுநீரக பிரச்னைகள் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கிடையே, சென்னை சைதாப்பேட்டையில் 11 வயது சிறுவன் குடிநீர் அருந்தி உயிரிழந்ததன் எதிரொலியாக நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் குழந்தைகள் இருக்கும் வீடுகளுக்கு இரண்டு ORS பவுடர் மற்றும் sig மாத்திரை வழங்கப்படும்"

இவ்வாறு பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்தார்.

Tags :
Director of Public HealthFood Safety Departmentheart diseaseHigh Blood PressureSelva Vinayak
Advertisement
Next Article