For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

'நீர்வழிப்படூஉம்' நாவலுக்காக எழுத்தாளர் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது என தகவல்!

12:27 PM Dec 11, 2023 IST | Web Editor
 நீர்வழிப்படூஉம்  நாவலுக்காக எழுத்தாளர் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது என தகவல்
Advertisement

2023ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் தேவிபாரதி ’நீர்வழிப்படூஉம்’ நாவலுக்கு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கஸ்பாப்பேட்டை என்னும் ஊரில் டிசம்பர் 30, 1957-ல் எழுத்தாளர் தேவிபாரதி பிறந்தார். அவரின் இயற்பெயர் ராஜசேகரன். அவர் தனது சொந்த ஊரான கஸ்பாபேட்டையில் உள்ள பள்ளியில் பதினொன்றாம் வகுப்புவரை படித்துள்ளார்.

தேவிபாரதி பல நாவல்கள்,  சிறுகதைகள், கட்டுரைகள், திரைப்படக் கட்டுரைகள் போன்றவற்றை எழுதி உள்ளார். குறிப்பாக தேவிபாரதியின் சிறுகதைகளில் காந்தியை பற்றிய "பிறகொரு இரவு" போன்றவை கவனிக்கப்பட்ட படைப்பாக உள்ளது. மேலும், அரசியல் கட்டுரைகளும், நெடுக்கடி நிலை மற்றும் இடதுசாரி இயக்கங்களில் செயல்பட்டதைப் பற்றிய நினைவுக்குறிப்புகளும் எழுதியிருக்கிறார்.

எழுத்தாளர் தேவபாரதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளில் ஒன்று தன்னறம். இந்த சிறுகதை  2022 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு பலரின் வரவேற்பை பெற்றது. பலி, கண் விழுத்த மறுநாள், மூன்றாவது விலா எலும்பும் விழுதுகற்ற ஆல மரமும் போன்ற பல சிறுகதைகளை படைத்துள்ளார்.

புழுதிக்குள் சில சித்திரங்கள் (அரசியல் கட்டுரை),  அற்ற குளத்து அற்புத மீன்கள், சினிமா பாரடைஸோ (திரைப்படக்கட்டுரை) போன்ற கட்டுரைககளையும், நிழலின் தனிமை, நட்ராஜ் மகராஜ், நீர்வழிப்படூஉம், நொய்யல்  போன்ற நாவல்களையும் எழுதி உள்ளார்.

இவரின் அற்புதமான படைப்புகளுக்காக ஜெயந்தன் விருது,  அறிஞர் போற்றுதும் விருது, திருச்சி தன்னறம் விருது 2022 போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.  இந்த நிலையில், 
எழுத்தாளர் தேவிபாரதியின் "நீர்வழிப்படூஉம்" தொகுப்பு சாகித்ய அகாதெமி விருது க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Tags :
Advertisement