சபரிமலை | 10 மணி நேரத்திற்கு மேல் வழிநெடுக காத்திருக்கும் ஐயப்ப பக்தர்கள்!
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல 10 மணி நேரத்திற்கு மேல் வழிநெடுக காத்திருக்கும் ஐயப்ப பக்தர்கள், சிறு குழந்தைகள் வயதானவர்கள் அவதிக்குள்ளானர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 16-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. தங்க அங்கியுடன் கூடிய ஊர்வலம் டிசம்பர் 23 ஆம் தேதி ஆரன்முளா ஸ்ரீ பார்த்தசாரதி கோயிலிலிருந்து புறப்பட்ட நிலையில், நாளை சபரிமலை சென்றடைந்து 27-ம் தேதி மண்டல பூஜையுடன் நிறைவடைகிறது. அன்று இரவு 10:00 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டு மண்டலக்காலம் நிறைவு பெறும். மீண்டும் டிசம்பர் மாதம் 30-ம் தேதி மாலை மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும்.
பின்னர் டிசம்பர் மாதம் 31-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி மகர விளக்கு பூஜைகள் நடைபெறும். அன்று மாலை 6.30 மணிக்கு மகர ஜோதி தரிசனம் செய்யப்படும். தொடர்ந்து ஜனவரி 19-ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். ஜனவரி 20-ம் தேதி காலையில் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி தரிசனத்திற்கு பின்னர் கோயில் நடை அடைக்கப்படும். அன்றுடன் நடப்பு ஆண்டு மண்டல மகரவிளக்கு சீசன் நிறைவுபெறும்.
இதையும் படியுங்கள் : தூத்துக்குடியில் களைகட்டும் கிறிஸ்துமஸ் - பனிமய மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி
இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்ட
நாளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலை
ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.
இதனையடுத்து, சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்து வருவதால் நெரிசலை தவிர்க்க எரிமேலி, நிலக்கல், துலா பள்ளி, முண்டகையம் போன்ற இடங்களில் ஐயப்ப பக்தர்கள் வரும் பகுதியில் எல்லாம் நீண்ட நேரம் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்துவதால் 10 மணி நேரத்திற்கு மேல் வாகனத்திலேயே காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுபோல் பம்பை செல்லும் பக்தர்களும் மலை ஏற 5 மணி நேரத்திற்கு
மேல் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மண்டல பூஜைக்கு இரு தினங்கள் உள்ள
நிலையில் சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் மனித தலைகளாக
காட்சியளிக்கிறது. கடும் குளிரில் குடிக்க தண்ணீர், உணவின்றி சாலையிலேயே
பக்தர்கள், குழந்தைகள், முதியவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.