மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு!
07:23 AM Feb 13, 2024 IST
|
Web Editor
இன்று மாலை 5:00 மணிக்கு சரியாக நடை திறக்கப்பட்டு புதிய மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றிய பின் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதன் பின்னர் பிப்ரவரி 18ஆம் தேதி இரவு 10மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். மாசி மாத பூஜைகளுக்காக ஆன்லைன் முன்பதிவு, உடனடி முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த நிலையில் மாசி மாத பூஜையை முன்னிட்டு, ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, பத்தனம்திட்டா, கோட்டயம், செங்கன்னூர், திருவனந்தபுரம், கொட்டாரக்கரை, எர்ணாகுளம், பாலக்காடு உட்பட முக்கிய பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
Advertisement
மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று நடை திறக்கப்பட உள்ளது.
Advertisement
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். அதன்படி மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை பிப்ரவரி 13 ஆம் தேதியான இன்று திறக்கப்படுகிறது.
Next Article