Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சபரிமலை: ஆட்டிற்கு காவல் நின்ற போலீசார்| பக்தர்கள்  நெகிழ்ச்சி!

12:35 PM Nov 25, 2023 IST | Web Editor
Advertisement

சபரிமலையில் பக்தர் ஒருவரின் ஆட்டிற்கு போலீசார் பாதுகாப்பிற்கு நின்றது காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்தது.

Advertisement

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை கடந்த
16-ம் தேதி மாலை திறக்கப்பட்டது.  மறுநாள் முதல் ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்
செய்து வருகிறார்கள்.  சாமி தரிசனம் செய்ய தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
சபரிமலையில் திரண்டு வருகின்றனர்.  மண்டல கால பூஜைக்காக நடை திறக்கப்பட்டது
முதல் ஏராளமான பக்தர்கள் பல்வேறு விதமான பொருட்களை காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர்.  அந்த வகையில் திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூரில் இருந்து வந்த வேல்சாமி என்பவர் ஐயப்பனுக்கு ஜம்னாப்யாரி ஆட்டை  காணிக்கையாக வழங்கினார்.

இதையும் படியுங்கள்:  ஆஸி. வீரர் மிட்செல் மார்ஷ் மீது வழக்குப்பதிவு – உலகக்கோப்பை மீது கால் வைத்ததால் நடவடிக்கை..

இதற்காக தான் கொண்டு வந்த ஆட்டுடன் கானபாதை வழியாக கடந்து வந்து அனைவரையும் நெகிழ வைத்தார்.  தொடர்ந்து ஆட்டுடன் சபரிமலை சன்னிதானம் வந்த அவர் அங்கு 18-ம் படிக்கு கீழே ஆட்டை கட்டிவிட்டு,  இருமுடியுடன் 18-ம் படி ஏறி சாமி தரிசனம் செய்தார்.  வேல்சாமி திரும்பி வரும்வரை ஆட்டிற்கு போலீசார் பாதுகாப்பாக நின்றிருந்த சம்பவம் காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்தது.

Tags :
ayyappan templeIndiaKeralanews7 tamilNews7 Tamil UpdatesPoliceSabarimala
Advertisement
Next Article