Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Sabarimala | பக்தர்களின் வசதிக்காக சபரிமலையில் இலவச Wifi வசதி தொடக்கம்!

11:54 AM Nov 16, 2024 IST | Web Editor
Advertisement

பக்தர்களின் வசதிக்காக சபரிமலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் இலவச வைஃபை சேவை தொடங்கப்பட்டுள்ளது. 

Advertisement

கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு இன்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்க துவங்கினர். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இன்றிலிருந்தே பக்தர்கள் வர ஆரம்பித்து விடுவர். மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை சமயங்களில் ஐயப்ப பக்ததர்களின் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். அப்போது கூட்ட நெரிசல் காரணமாகவும், சபரிமலை ஐய்யப்பன் கோயில் வனப்பகுதியில் அமைந்துள்ளதாலும் நெட்ஒர்க் கிடைப்பதில் சிரமம் ஏற்படும்.

இந்த நெட்ஒர்க் சிரமங்களை சமாளிக்க பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் தற்போது பக்தர்கள் வசதிக்காக 48 இடங்களில் இலவச வைஃபை, ஹாட்ஸ்பாட் (Wifi, Hotspot) வசதியை ஏற்பாடு செய்துள்ளது. இந்த இன்டர்நெட் வசதிகள் சபரிமலை சன்னிதானம் முதல் நிலக்கல் வரையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சபரிமலை வழித்தடத்தில் புதிய 4ஜி டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வைஃபை வசதியை பெறுவது எப்படி?

பிஎஸ்என்எல்-லின் வைஃபை சேவையைப் பெற முதலில் போனில் உள்ள வைஃபை ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும். பின்பு, திரையில் காட்டப்படும் பி.எஸ்.என்.எல் வைஃபை அல்லது பி.எஸ்.என்.எல் பிஎம்வாணி எனும் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். இதையடுத்து திறக்கப்படும் வலைப்பக்கத்தில், பத்து இலக்க மொபைல் எண்ணைத் பதிவிட வேண்டும். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட தொலைபேசிக்கு 6 இலக்க எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும். இதனை உள்ளீடு செய்ததும் வைஃபை சேவையைப் பெறலாம். 

Advertisement
Next Article