Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

”சபரிமலை ஐயப்பன் கோயில் 1000 கோடியில் மேம்படுத்தப்படும்” - பினராயி விஜயன்!

சபரிமலை ஐயப்பன் கோயிலின் மேம்பாட்டுப் பணிகளுக்கு மொத்தம் ரூ.1033.62 கோடி செலவிடப்படும் என்று கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
06:50 PM Sep 20, 2025 IST | Web Editor
சபரிமலை ஐயப்பன் கோயிலின் மேம்பாட்டுப் பணிகளுக்கு மொத்தம் ரூ.1033.62 கோடி செலவிடப்படும் என்று கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
Advertisement

கேரள மாநில அரசு மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் இணைந்து நடத்தும் சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு பம்பையில் இன்று காலை தொடங்கியது. இதில்  கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கலந்து கொண்டார்.

Advertisement

அப்போது பேசிய அவர்,

“சன்னிதானம், பம்பா மற்றும் மலைக்கோயிலுக்குச் செல்லும் மலையேற்றப் பாதை ஆகியவற்றின் பல்வேறு கட்ட மேம்பாட்டுப் பணிகளுக்கு மொத்தம் ரூ.1033.62 கோடி செலவிடப்படும். இவை அனைத்தும் 2039 ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த 2025-2030 க்கு இடையில் ரூ.300 கோடிக்கு மேல் செலவிடப்படும்”  என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், பக்தர்களாக வேடமிட்டு சிலர் உச்ச நீதிமன்றம் வரை சென்று மாநாட்டைத் தடுக்க முயன்றனர்.ஆனால், உச்ச நீதிமன்றம் அத்தகைய முயற்சிகளைத் தடுத்தது” என்றார்.

 

Tags :
iyeppadevoteesconfrencelatestNewspinarayivijyansabarimalaiyappantemple
Advertisement
Next Article