சபரிமலை | கன்னிச்சாமியாக சென்ற 100 வயது மூதாட்டி!
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 100 வயது மூதாட்டி ஒருவர் கன்னிச்சாமியாக சென்றுள்ளார்.
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை நவம்பர் 16-ம் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் முதல் ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரண்ட வண்ணம் உள்ளனர். ஆன்லைன் மூலம் ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்து தரிசனம் செய்து வரும் நிலையில், உடனடி முன்பதிவு மையங்களிலும் ஏராளமானோர் பதிவு செய்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
இதையும் படியுங்கள்: இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷன் இல்லை!
தற்போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 17 மணி நேரம் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இருந்த போதிலும் பக்தர்கள் வருகை மிகவும் அதிகமாக இருப்பதால், சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை நிலவி வருகிறது. தொடர்ந்து டிசம்பர் 27-ம் தேதி சபரிமலையில் மண்டல பூஜை நடைபெற உள்ளது.
இந்த நிலையில் சபரிமலைக்கு 100 வயது மூதாட்டி ஒருவர் கன்னிச்சாமியாக சென்றுள்ளார். மூதாட்டி பருகுட்டியம்மா இஸ்ரேல்-ஹமாஸ் போரினை முடிவுக்கு கொண்டு வர, ஐயப்பனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அவரது பேரன் கிரிஷ் குமார், மனைவி ராக்கி, போரால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலில் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது. பருகுட்டியம்மா, சபரிமலை ஐயப்பனை காண, தமக்கு பலரும் உதவியதாக கூறினார். மேலும் புகழ்பெற்ற 18 தங்கப்படிகளையும், ஐயப்பனின் இருப்பிடமான தங்க கோயிலையும் கண்டு, திருப்தி அடைந்ததாக கூறினார்.