Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

உக்ரைன் மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய ரஷ்யா - 3 சிறுவர்கள், உட்பட 7 பேர் பலி!

11:00 AM Feb 11, 2024 IST | Web Editor
Advertisement

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்கதலில் 3 சிறுவர்கள், உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.  

Advertisement

உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் 3-வது ஆண்டை நெருங்கியுள்ளது.  கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தனது தாக்குதல்களை நடத்தியது.  ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களால் உக்ரைனில் உயிர் மற்றும் உடைமை இழப்புகள் தொடர்ந்து அதிகரித்தன.  ஆரம்பத்தில் புடினின் படைகள் ஆக்ரோஷமாக இருந்தன.

பின்னர் ஜெலென்ஸ்கியின் ராணுவமும் மேற்கத்திய ஆயுதங்களின் உதவியுடன் எதிர் தாக்குதல்களை நடத்தி ரஷ்யாவை அதிர வைத்தது.  இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.  இந்த தாக்குதல் உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கிவ் மீது நிகழ்ந்துள்ளது.  இது குறித்து பிராந்திய ஆளுநர் ஒலே சினீஹுபொவ் கூறியதாவது:

"ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷஹீத் ரக ட்ரோன் மூலம் ரஷ்யா கார்கிவ் நகரில் தாக்குதல் நடத்தியுள்ளது.  நெமிஷ்லியான் பகுதியில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் குடியிருப்பு பகுதியின் மீது அந்த ட்ரோன் விழுந்து வெடித்தது.  இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த 15 வீடுகள் எரிந்து நாசமாகியது.  இதில் பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்தனர்.  அவர்களில் 3 பேர் சிறுவர்கள்."

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் இந்தத் தாக்குதலில் 50- க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாக உள்துறை அமைச்சர் இஹார் க்ளிமென்கோ தெரிவித்தார்.

Tags :
Drone attackrussiaRussia Ukraine warUkraine
Advertisement
Next Article