Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ரஷியாவில் பயணிகள் ரயில் விபத்து - மீட்பு பணிகள் தீவிரம்!

09:46 AM Jun 27, 2024 IST | Web Editor
Advertisement

ரஷியாவில் பயணிகள் ரயில் விபத்து ஏற்பட்டு 70 பேர் காயமடைந்ததுள்ளதாக தகவல் வெளியான நிலையில் விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

ரஷியாவில் பயணிகள் ரயில் தடம் புரண்டதில் 70 பேர் காயமடைந்ததுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷிய ஊடகத்தில் வெளியான செய்திகளில் 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோமி குடியரசின் வோர்குடாவில் இருந்து நோவோரோசிஸ்க் வரை 5,000 கி.மீ. தொலைவுக்கு இயக்கப்பட்ட பயணிகள் ரயில், இண்டா நகரம் அருகே உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 6.12 மணியளவில் தடம் புரண்டுள்ளது. மொத்தம் 14 பெட்டிகளில் 511 பயணிகள் பயணித்த நிலையில், 9 பெட்டி தடம் புரண்டுள்ளது. இதில், 70 பயணிகள் காயமடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படியுங்கள் : டி20 உலக கோப்பை | முதல்முறையாக இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா!... முடிவுக்கு வந்த ஆப்கானிஸ்தான் அணியின் கனவு...!

கனமழை காரணமாக ரயில் விபத்து ஏற்பட்டதாக ரஷிய ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ள நிலையில், 2 மீட்பு ரயில்களுடன் மீட்புப் படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Tags :
injuredkomipassengerrussiatrain accident
Advertisement
Next Article