For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உக்ரைனுக்கு எதிராக வட கொரிய ராணுவ வீரர்களை களமிறக்கும் #Russia? ஜெலன்ஸ்கியை தொடர்ந்து தென் கொரியா குற்றச்சாட்டு!

10:56 AM Oct 19, 2024 IST | Web Editor
உக்ரைனுக்கு எதிராக வட கொரிய ராணுவ வீரர்களை களமிறக்கும்  russia  ஜெலன்ஸ்கியை தொடர்ந்து தென் கொரியா குற்றச்சாட்டு
Advertisement

உக்ரைனில் ரஷிய படையினருடன் இணைந்து சண்டையிடுவதற்காக 1,500 வட கொரிய ராணுவ வீரர்கள் சென்றுள்ளதாக தென் கொரிய உளவுத் துறை தெரிவித்துள்ளது.

Advertisement

உக்ரைன் - ரஷ்யாவிற்கு இடையே போர் தொடங்கி கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. போரை கைவிட பல நாடுகள் வலியுறுத்தியும் போர் தொடர்ந்து வருகிறது. இருநாடுகளுக்கிடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர மற்ற நாடுகள் எடுத்து வரும் முயற்சிகளும் தோல்வியிலேயே முடிகின்றன.

இந்நிலையில் உக்ரைனுக்கு எதிராக போரிட, ரஷ்ய படைகளுடன் வடகொரிய ராணுவ வீரர்கள் இணைந்துள்ளதாக தென்கொரியா கூறியுள்ளது. உக்ரைனுக்கு எதிரான போரில் 10 ஆயிரம் வடகொரிய வீரர்களை அனுப்ப ரஷ்யா திட்டமிட்டிருப்பதாக அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டிய நிலையில், தென்கொரியா இச்செய்தியை கூறியுள்ளது.

இதுகுறித்து தென்கொரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

வட கொரிய ராணுவத்தின் சிறப்புப் படை வீரர்களை, போர்க் கப்பல்கள் மூலம் ரஷ்யா தங்கள் நாட்டின் துறைமுக நகரான விளாதிவோஸ்டோகுக்கு அழைத்து வந்துள்ளது. கடந்த 8 முதல் 13-ஆம் தேதி வரை 1,500 வீரர்கள் அவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளனர். இது போல் மேலும் பல வட கொரிய வீரர்கள் ரஷ்யாவுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்கள் ரஷ்ய வீரர்களுடன் இணைந்து உக்ரைனுக்கு எதிராக போரில் ஈடுவார்கள். அவர்களுக்கு ரஷ்ய ராணுவ சீருடைகள் மற்றும் ஆயுதங்களும், போலியான ஆவணங்களும் அளிக்கப்படுகின்றன” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போரின் முடிவில், கொரிய தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் அமெரிக்க ஆதரவுடன் ஜனநாயக ஆட்சியும், வடக்கே சோவியத் யூனியன் ஆதரவுடன் கம்யூனிஸ்ட் ஆட்சியும் அமைக்கப்பட்டது. 1950-இல் கொரிய போருக்குப் பிறகும், தென் கொரியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து பாதுகாப்பு உதவி அளித்து வருகிறது. இதனால் வட கொரியாவுடன் ரஷ்யா நட்பு பாராட்டி வருகிறது.

இச்சூழலில் உக்ரைனுக்கு எதிரான போரில், ரஷ்யாவுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ள வடகொரியா, போருக்கு ஆயுதங்களை விநியோகித்து வருவது மட்டுமல்லாமல் தற்போது ராணுவ வீரர்களையும் வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடதக்கது.

Tags :
Advertisement