ரஷியா : 50 பயணிகளுடன் சென்ற விமானம் மாயம்!
ரஷியாவில் 50 பயணிகளுடன் சென்ற விமானம் மாயமாகியுள்ளது.
12:55 PM Jul 24, 2025 IST | Web Editor
Advertisement
ரஷியாவின் கிழக்கே வெகு தூரத்தில் சீனா எல்லையில் உள்ள அமுர் பிராந்தியத்தில் டிண்டா என்ற நகர் உள்ளது. இந்த நகருக்கு சைபிரியாவை தளமாக கொண்ட அங்காரா விமான நிறுவனத்திற்கு சொந்தமான AN-24 பயணிகள் விமானம் சென்றுள்ளது.
Advertisement
இந்த நிலையில் 50 பயணிகளுடன் சென்ற விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விமானத்தில் 5 குழந்தைகள், 6 விமான ஊழியர்கள் உள்ளிட்ட 50 பேர் பயணம் செய்துள்ளனர். விமானம் வானில் பறந்த போது கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது மாயமான விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மாயமான விமானம் விபத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.