For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மின் கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் - இருளில் மூழ்கிய உக்ரைன்!

07:52 AM Jun 22, 2024 IST | Web Editor
மின் கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல்   இருளில் மூழ்கிய உக்ரைன்
Advertisement

மின் கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக் உக்ரைனின் முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கின.

Advertisement

உக்ரைன் மீது கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்த ரஷ்யா, அந்த நாட்டின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியில் ரஷ்ய மொழி பேசுவோரைப் பெரும்பான்மையாகக் கொண்ட டொனட்ஸ்க், கெர்சான், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா ஆகிய பிரதேசங்களின் கணிசமான பகுதிகளை உள்ளூர் கிளர்ச்சிப் படையினருடன் இணைந்து கைப்பற்றியது.

அந்த 4 பிரதேசங்களில் இன்னும் உக்ரைன் படையினரிடம் எஞ்சியுள்ள பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக ரஷ்யாவும் இழந்த பகுதிகளை மீட்பதற்காக உக்ரைனும் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றன.

கடந்த 28 மாதங்களாக ரஷ்யாவும், உக்ரைனும் பரஸ்பரம் நடத்திவரும் வான்வழித் தாக்குதல்களில் இரு தரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. உக்ரைனில் போர் நிறுத்தம் உடனடியாக ஏற்படவும், அமைதி நிலவவும், தேவையான சமாதான நடவடிக்கைகளை உலக நாடுகள் முன்னெடுத்துள்ளன.

இந்த நிலையில் உக்ரைனில் உள்ள மின் கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன.உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வரும் நிலையில் உக்ரைனில் உள்ள மின் கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா டிரோன் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

இதன் காரணமாக தலைநகர் கீவ் உள்பட உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் இருளில் மூழ்கின. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் சாலைகளில் உள்ள போக்குவரத்து சிக்னல் இயங்காமல் போயின. இதனால் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags :
Advertisement