For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“Run Forrest Run" : 30 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் Tom Hanks - Forrest Gump படக்குழு!

05:53 PM Mar 30, 2024 IST | Web Editor
“run forrest run    30 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் tom hanks   forrest gump படக்குழு
Advertisement

1994-ல் வெளியான ‘ஃபாரஸ்ட் கம்ப்’ஹாலிவுட் திரைப்படத்தின் குழுவினர் அத்திரைப்படத்தின் கதாநாயகன் டாம் ஹாங்க்ஸ் உடன் புதிய திரைப்படத்துக்காக மீண்டும் இணைகிறது. இந்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

"My Mama Always Said" என்ற வார்த்தையை எங்காவது கேட்டால் உடனடியாக நினைவுக்கு வருவது, டாம் ஹாங்க்ஸ் தான். 30 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ஃபாரஸ்ட் கம்ப் (Forrest Gump) திரைப்படம், சினிமா ரசிகர்களால் இன்றுவரை கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றும் பலரது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்களை அலங்கரித்து கொண்டிருப்பது இந்த படத்தின் வசனங்களே.

ஹாலிவுட் பிரிவில் சிறந்த திரைப்படங்களை பட்டியலிட்டால், ஃபீல் குட் வரிசையில் ஃபாரஸ் கம்ப் படத்துக்கு நிச்சயம் ஒரு இடம் இருக்கும். டாம் ஹாங்ஸ் தனித்துவ நடிப்பில், ராபர்ட் ஸெமிக்ஸ் இயக்கத்தில் 1994-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், 1986-ல் வின்ஸ்டன் க்ரூம் எழுதிய நாவலின் அடிப்படையில் உருவானது. உலக அளவில் எண்ணற்ற ரசிகர்களைக் கொண்ட இந்த திரைப்படத்தை, ஓடிடியில் இன்றும் பலரால் பார்க்கப்பட்டு வருகிறது.

மீம்ஸ் கிரியேட்டர்களின் தயவில் இந்தப் படத்தின் வசனங்களும், காட்சிகளும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன. வணிகத்திலும் விமர்சனத்திலும் பெரும் சாதனை படைத்த ஃபாரஸ் கம்ப் பல விருதுகளையும் குவித்தது. சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த தழுவல் திரைக்கதை, சிறந்த கிராபிக்ஸ், சிறந்த படத்தொகுப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளையும் இப்படம் அள்ளியது.

30 ஆண்டுகள் இடைவெளியில் தற்போது ‘ஹியர்’(Here) என்ற தலைப்பில் வரவிருக்கும் திரைப்படத்துக்காக, நடிகர்கள் டாம் ஹாங்க்ஸ், ராபின் ரைட் ஆகியோருடன், இயக்குனர் ராபர்ட் ஜெமெக்கிஸ், இணை எழுத்தாளர் எரிக் ரோத் ஆகியோரை உள்ளடக்கிய படக்குழு மீண்டும் இணைகிறது. முன்னதாக காஸ்ட் அவே (Cast Away (2000)), தி போலார் எக்ஸ்பிரஸ் (The Polar Express (2004)), பினோச்சியோ (Pinocchio (2022)) ஆகிய திரைப்படங்களுக்காக நடிகர் டாம் ஹாங்ஸ், இயக்குனர் ராபர்ட் ஜெமெக்கிஸ் ஆகியோர் இணைந்துள்ளனர். ஆனால் ஃபாரஸ்ட் கம்ப் திரைப்படத்தின் குழு முழுமையும் இணைவது 30 ஆண்டுகள் கழித்து இது சாத்தியமாகியுள்ளது.

ஃபாரஸ்ட் கம்ப் போலவே ஹியர் திரைப்படமும் நாவல் ஒன்றின் அடிப்படையில் உருவாகி இருக்கிறது. 2010-ல் ரிச்சர்ட் மெக்குயர் எழுதிய கிராஃபிக் நாவலில் இருந்தே ஹியர் திரைப்படமும் உருப்பெற்றுள்ளது. டாம் ஹாங்ஸ் உட்பட அனைவரும் முதிர்ச்சியை எட்டி இருப்பதால், புதிய ஏஐ தொழில்நுட்பம் வாயிலாக அனைவரையும் இளமையாக தோன்றச் செய்ய இருக்கின்றனர். இதற்கு ‘மெட்டாபிசிக் லைவ்’ எனப்படும் புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

இது படப்பிடிப்பின் போதே லைவாக முகத்தின் பொலிவை கூட்டுதல் மற்றும் முதுமையை நீக்குதல் ஆகியவற்றில் ஈடுபடும். இந்த ஆண்டு, நவம்பர் மாதத்தில் ஹியர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.   

Tags :
Advertisement