இயக்குநர் அவதாரமெடுக்கும் ’லப்பர் பந்து’ பட நடிகை?
'வதந்தி' வெப் சீரிஸ் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி. இந்த வெப் சீரிஸ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் மூலம், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கவனம் பெற்றார். இருப்பினும் அதன்பிறகு இவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதையும் படியுங்கள் : “7வது முறையும் திமுகவே ஆட்சி அமைக்கும்” – தொண்டர்களுக்கு முதலமைச்சர் #MKStalin மடல்!
இந்த சூழலில், இவர் கடந்த ஆண்டு வெளியான 'லப்பர் பந்து' படத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். மேலும், இவர் நடிகையாக மட்டுமல்லாமல் மணிரத்னம் இயக்கியுள்ள 'Thug Life' படத்தில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்த நிலையில், இவர் இயக்குநராக அவதாரமெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சஞ்சனா அடுத்ததாக இயக்குநராக ஒரு படத்தை எடுக்க முடிவு செய்துள்ளதாகவும், இதில் நடிகராக கவின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை சஞ்சனா படத்தை இயக்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.