For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பிரதமர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு ரூ.80 லட்சம் பாக்கி: 18% வட்டியுடன் செலுத்த எச்சரிக்கை!

03:16 PM May 25, 2024 IST | Web Editor
பிரதமர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு ரூ 80 லட்சம் பாக்கி   18  வட்டியுடன் செலுத்த எச்சரிக்கை
Advertisement

கடந்த ஆண்டு பிரதமர் தங்கியிருந்த ஹோட்டலுக்கான கட்டணம் இன்னும் செலுத்தப்படாத நிலையில், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஹோட்டல் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

கர்நாடக மாநிலம் மைசூரில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம்,  சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் இணைந்து நடத்திய 50 ஆண்டு கால புலிகள் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி ரேடிசன் ப்ளூ பிளாசா என்ற நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார்.

அப்போது பிரதமருடன் வந்த அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினர்,  வனத்துறை அதிகாரிகள் ஆகியோரும் அங்கு தங்கினர்.  பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஏப்ரல் மாதம் 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடந்தது.  இந்த நிகழ்ச்சிக்காக ரூ. 3 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.  ஆனால் நிகழ்ச்சியின் மொத்த செலவு ரூ. 6.33 கோடியாக உயர்ந்தது.  மத்திய அரசு சார்பில் ரூ. 3 கோடி வழங்கப்பட்டாலும்,  மாநில வனத் துறை மீதி 3.33 கோடியை கேட்டும் இன்னும் அந்த தொகை விடுவிக்கப்படவில்லை.

இதனையடுத்து செப்டம்பர் மாதம் 29-ந்தேதி கர்நாடக முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (வனவிலங்கு) டெல்லியில் உள்ள தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்கு ரூ.3.33 கோடி பாக்கியை நினைவூட்டி கடிதம் எழுதினார்.  ஆனால் அந்த செலவை மாநில அரசே ஏற்க வேண்டும் என NTCA பதில் கடிதத்தில் தெரிவித்தது.

இதற்கிடையே பிரதமர் தங்கிய பிரபல ஹோட்டலின் பொது மேலாளர் (நிதி), வனத்துறை துணை பாதுகாவலர் பசவராஜூக்கு கடந்த மார்ச் 21ஆம் தேதி ஒரு கடிதம் எழுதினார். அதில் ஹோட்டலின் சேவைகளை பயன்படுத்தி 12 மாதங்களுக்கு பிறகும் ரூ. 80.6 லட்சம் கட்டணம் செலுத்தவில்லை என்று தெரிவித்து இருந்தார்.  மேலும் தாமதமாக செலுத்துவதற்கு ஆண்டுக்கு 18 சதவீத வட்டி எனவும்,  ஜூன் 1, 2024க்குள் நிலுவைத் தொகையை செலுத்தத் தவறினால்,  சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement