Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"நீதித்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்த தமிழ்நாட்டிற்கு ரூ.61.27 கோடி" - மத்திய அமைச்சர் #ArjunRamMeghwal

03:46 PM Oct 11, 2024 IST | Web Editor
Advertisement

மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் நீதித்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், மாநிலத்தில் நீதி வழங்கல் முறையை மேம்படுத்தவும் 61.27 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு நிதி பகிர்வாக ரூ.1,78,173 கோடியை மத்திய அரசு விடுவித்தது. அக்டோபர் மாதம் வழங்க வேண்டிய தொகையுடன் கூடுதலாக ஒரு மாத தவணையை மத்திய அரசு விடுவித்தது. அதாவது கூடுதல் தவணையாக முன் கூட்டியே ரூ.89,086.50 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதன்படி தமிழ்நாட்டின் பங்காக ரூ.7,268 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டும், மாநிலங்கள் மூலதனச் செலவினங்களை விரைவுபடுத்துவதற்கும், அவற்றின் வளர்ச்சி மற்றும் நலன் சார்ந்த செலவினங்களுக்கு நிதியளிக்கும் வகையிலும் இவ்வாறு ஒரு மாத தவணையை முன்கூட்டியே விடுவித்துள்ளது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் நீதித்துறைக்கு ரூ.61.27 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,

"மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் நீதித்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், மாநிலத்தில் நீதி வழங்கல் முறையை மேம்படுத்தவும் 61.27 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது."

இவ்வாறு மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பதிவிட்டுள்ளார்.

Tags :
Arjun Ram MeghwalfundLawtamil naduunion govtunion minister
Advertisement
Next Article