பழுதான காரை விற்ற பிஎம்டபிள்யூ நிறுவனத்துக்கு ரூ.50 லட்சம் அபராதம் - உச்சநீதிமன்றம் உத்தரவு!
மோசடி வழக்கில் ரூ.50 லட்சம் அபராதம் வழங்குமாறு சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ இந்தியாக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2009, செப்டம்பர் 25-ஆம் தேதி ஜிவிஆர் இந்தியா நிறுவனம் (மனுதாரர்) பிஎம்டபிள்யூ 7 சீரியஸ் கார் ஒன்றை வாங்கியது. கார் வாங்கிய 4 நாட்களிலேயே பழுதாகியுள்ளது. இதனையடுத்து கார் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சரிபார்க்கப்பட்டுள்ளது.
பின்னர் மீண்டும் அதே ஆண்டு நவம்பர் மாதமும் கார் பழுதாகியது. இதைத்தொடர்ந்து, கார் உரிமையாளர் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 418 மற்றும் 420-இன் கீழ் விற்பனையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில் தயாரிப்பு நிறுவனம், நிர்வாக இயக்குநர் மற்றும் பிற இயக்குநர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
இந்த வழக்கை கடந்த 2012-ஆம் ஆண்டு விசாரித்த தெலங்கானா உயர்நீதிமன்றம், ‘விற்பனையாளர்களை ஏமாற்றுக்காரர்கள் என எஃப்ஐஆர் தரவுகள் மூலம் மட்டுமே முடிவு செய்துவிட முடியாது எனக்கூறி கார் நிறுவனம் மீதான புகார்களை ரத்து செய்தது. மனுதாரருக்கு புதிய காரை வழங்க உத்தரவிட்டது. இதை உத்தரவை எதிர்த்து மனுதாரரான ஜிவிஆர் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
மேலும், மனுதாரருக்கு புதிய காரை வழங்கவும் உத்தரவிட்டது. மேலும் மனுதாரருக்கு நஷ்ட ஈடாக ரூ.50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும், அதனை வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.