Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.4000! பரப்புரையின் போது ராகுல் காந்தி அறிவிப்பு!!

10:13 PM Nov 02, 2023 IST | Web Editor
Advertisement

தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ. 4,000 வரை வழங்கப்படும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Advertisement

சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், மிஸோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு இந்த மாதத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி தேசிய, மாநில கட்சிகள் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில், தெலங்கானா மாநிலத்துக்கு வருகிற நவம்பர் 30 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தெலங்கானா மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தெலங்கானாவில் காலேஸ்வரம் லிப்ட் பாசனத் திட்டத்தை ஆய்வு செய்தார்.

மெடிகடா தடுப்பணையை ஆய்வு செய்த அவர், தரமற்ற கட்டுமானத்தால் பல தூண்களில் விரிசல் ஏற்பட்டு தூண்கள் நீரில் மூழ்கி வருவதாகவும் முதல்வர் சந்திரசேகர் ராவ் மற்றும் அவரது குடும்பத்தினர், காலேஸ்வரம் திட்டத்தை தங்களது தனிப்பட்ட ஏடிஎம் ஆக பயன்படுத்தி வருவதாக கடும் விமர்சனம் செய்தார். மேலும் பேசிய அவர், 'முதல்வரின் ஊழலால் தெலங்கானாவில் பெண்கள்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ. 4,000 வரையில் கிடைக்கும். அதில் ரூ. 2,500 பெண்களின் வங்கிக்கணக்கில் வழங்கப்படும், கேஸ் சிலிண்டர் மானிய விலையில் ரூ. 500-க்கு வழங்கப்படும். அடுத்ததாக, ரூ. 1,000-க்கு அரசு பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்' என்று தெரிவித்தார். தெலங்கானாவில் ஊழல் ஆட்சியை அகற்றி மக்களுக்கான ஆட்சியை மக்கள் கொண்டுவர வேண்டும் என்றார். பிரதமர் மோடியைப்போல தான் வாக்குறுதி மட்டும் கொடுக்கவில்லை, சொன்னதை நிறைவேற்றுவேன் என்றும் பேசினார்.

Tags :
BRScampaignCongressElectionelection campaignnews7 tamilNews7 Tamil UpdatesRahul gandhiTelangana
Advertisement
Next Article