For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஜார்க்கண்ட் அமைச்சர் அலாம்கிர் தொடர்புடைய இடத்தில் ரூ.30 கோடி பணம் பறிமுதல்! அமலாக்கத்துறை நடவடிக்கை!

01:31 PM May 06, 2024 IST | Web Editor
ஜார்க்கண்ட் அமைச்சர் அலாம்கிர் தொடர்புடைய இடத்தில் ரூ 30 கோடி பணம் பறிமுதல்  அமலாக்கத்துறை நடவடிக்கை
Advertisement

ஜார்க்கண்ட் அமைச்சர் அலாம்கிர் தொடர்புடைய இடத்தில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள்,  குவியல் குவியலாக குவித்து வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.30 கோடி ரொக்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

Advertisement

ஜார்க்கண்ட் மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக அலாம்கிர் ஆலன் உள்ளார். இந்நிலையில்,  ஜார்க்கண்ட் மாநில அரசின் பல்வேறு திட்டங்களில் முறைகேடு நடந்திருப்பதாக புகார்கள் எழுந்தன.  இது தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர் வீரேந்திர ராம் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார்.  இந்த வழக்குகளில் சட்டவிரோத பணப் பரிமாற்ற புகார்களும் அடக்கம்.  இதனையடுத்து அமலாக்கத்துறையும் இவ்வழக்கை கையில் எடுத்தது.

ஜார்க்கண்ட் அமைச்சர் அலாம்கிர் உதவியாளரின் வீட்டு வேலைக்காரர் சஞ்சீவ் லால் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.  இந்த சோதனைகளின் போது சஞ்சீவ் லால் வீட்டில் குவியல் குவியலாக சுமார் ரூ.30 கோடி வரையிலான ரொக்கப் பணம் குவிக்கப்பட்டிருந்தது கண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிர்ந்து போயினர்.

இதனைத் தொடர்ந்து கைப்பற்றப்பட்ட பணம் எவ்வளவு என்பதை கண்டறிய ஏராளமான பணம் எண்ணும் மெஷின்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.  அனைத்து பணமும் எண்ணி முடிக்க பல மணிநேரம் ஆகும் என்பதால் ஜார்க்கண்ட் அமைச்சரின் உதவியாளர் தொடர்புடைய இடத்தில் கைப்பற்ற பணம் எவ்வளவு என்பது பின்னரே தெரியவரும் என்கின்றன அமலாக்கத்துறை அதிகார வட்டாரங்கள்.

Tags :
Advertisement