#HaryanaAssemblyElection | பெண்களுக்கு மாதந்தோறும் ரூ 2,000! அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட காங்கிரஸ்!
ஹரியானா சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு காங்கிரஸ் வலுவான போட்டியை கொடுத்து வருகிறது. மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் குறைந்து இருந்த நிலையில், நலத்திட்டங்கள் மூலம் மக்கள் ஆதரவைப் பெற காங்கிரஸ் முயற்சிதடு வருகிறது.
இந்நிலையில், ஹரியானா சட்டமன்றத் தேர்தலுக்கான அறிக்கையை டெல்லியில் உள்ள AICC தலைமையகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இன்று வெளியிட்டார். இதற்கு சங்கல்ப் பத்ரா என்று காங்கிரஸ் பெயரிட்டுள்ளது.
ஹரியானா காங்கிரஸ் அறிக்கை 2024:
இதில், பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள், ஏழைகள், விவசாயிகள் ஆகியோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஹரியானா சட்டசபை தேர்தலுக்கு காங்கிரஸ் 7 உத்தரவாதங்களை அளித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், ஹரியானா முன்னாள் முதல்வர் பூபேந்திர சிங் ஹூடா, ஹரியானா காங்கிரஸ் தலைவர் உதய் பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பெண்களுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய்:
- 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2000
எல்பிஜி கேஸ் சிலிண்டர் ரூ.500.
மூத்த குடிமக்களுக்கு ரூ.6,000 ஓய்வூதியம்.
பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும்.
காலியாக உள்ள 2 லட்சம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
ஹரியானா போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும்.
சிரஞ்சீவி யோஜனா திட்டத்தின்படி, 25 லட்சம் ரூபாய் மதிப்பில் இலவச சிகிச்சை
வீடுகளுக்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம்
ஏழைக் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைகள்
விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதிப்படுத்தப்படும்