மாநிலங்கவை எம்பியாக்குவதாகக் கூறி ரூ.2.25 கோடி 'அபேஸ்' - மோசடிகாரர்களை போலீசில் பிடித்துக் கொடுத்த முதியவர்!
மாநிலங்கவையில் சீட் வாங்கி தருவதாக கூறி 63 வயது முதியவர் ஒருவரிடம் ரூ. 2.25 கோடி மோசடி செய்த நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் கிஷன்கர் நகரில் உள்ள ஒரு கோயிலில் தலைமை பூசாரியாக இருப்பவர் தாஸ். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 63 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரை நவீன்குமார் என்பவருக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த முதியவரிடம், நவீன்குமார் குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரி என தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பை அடுத்து முதியவரும் நவீன்குமாரும் அடிக்கடி பலமுறை சந்தித்துள்ளனர்.
நாளடைவில் நெருக்கமாக பழகி வந்த முதியவரிடம், அவரின் பெயர் மாநிலங்கவை உறுப்பினர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டதாக நவீன் மற்றும் தாஸ் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவரை நம்ப வைப்பதற்காக, அவரது பிறந்த நாள் அன்று அவருக்கு வாழ்த்து மடல் ஒன்றையும் கொடுத்துள்ளனர். அந்த கடிதத்தில் குடியரசுத் தலைவரின் பெயரும், அவரின் போலி லெட்டர்ஹெட்டும் இருந்துள்ளன. இதனையடுத்து அவருக்கு ராஜ்யசபாவில் தாங்கள் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ. 5 கோடி கேட்டுள்ளனர்.
இந்த மோசடி சம்பவம் குறித்து கூறிய போலீசார் முதியவர் ஒரு சமூக சேவகர் எனவும், விட்டல் பாய் படேல் இல்லத்தில் சந்திப்பதற்கான அனுமதி அவர்களுக்கு எப்படி கிடைத்தது என தெரியவில்லை எனக் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றோம் எனவும் தெரிவித்துனர்.