Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000 - புதுமைப்பெண் திட்டத்தை நீட்டித்து அரசாணை வெளியீடு!

11:14 AM Mar 16, 2024 IST | Jeni
Advertisement

புதுமைப்பெண் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் நீட்டிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் உயர்கல்வியில் சேர்வதை உறுதி செய்யும் விதமாக மாதம் 1000 ரூபாய் வழங்கும் வகையில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என்ற புதுமைப்பெண் திட்டம் கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் 2.73 லட்சம் மாணவிகள் பயன்பெற்று வருவதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்தது.

இதையடுத்து, புதுமைப்பெண் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வியில் படிக்கும் மாணவிகளுக்கும் நீட்டிக்கப்படும் என்றும், இதற்காக ரூ.370 கோடி ஒதுக்கப்படும் என்றும், கடந்த பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார்.

இதையும் படியுங்கள் : கேசிஆர் மகள் கவிதா கைது எதிரொலி - தெலங்கானாவில் இன்று முழு அடைப்பு!

அதன்படி அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டத்தை நீட்டித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 49,664 மாணவிகள் கூடுதலாக பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 2024-25 நிதியாண்டில் ரூ.35.37 லட்சம் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Tags :
HigherEducationPuthumaiPennschemeSchoolsstudentsTNGovt
Advertisement
Next Article