வெள்ளத்தில் முழ்கிய ரூ.100 கோடி மதிப்பிலான குடியிருப்புகள்!
குர்கான் மாவட்டத்தில் உள்ள ரூ.100 கோடி மதிப்பிலான புதிய ’DLF Camellias’ குடியிருப்புகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டி தீர்த்து வருகிறது. மழையால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கனமழையால் அனைத்து இடங்களும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மேலும் ஹரியானாவிலும் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் டெல்லியை அடுத்த குர்கான் மாவட்டத்தில் பெயர் பெற்ற ரூ.100 கோடி மதிப்புள்ள DLF Camellias அடுக்குமாடி குடியிருப்புகள் நீரால் மிதக்கின்றன. இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. குர்கானின் கோல்ஃப் கோர்ஸ் சாலையில் உள்ள ரூ.100 கோடி கேமிலியாஸ் மற்றும் மாக்னோலியாக்களுக்கு முன்னால் உள்ள சாலைகளின் நிலை இதுதான்” என ஒருவர் இந்த வீடியோவை பதிவிட்டு குறிப்பிட்டுள்ளார். மேலும் அரை மணிநேர மழைக்கே இதுதான் நிலைமை. ஆனால் இங்குள்ள மக்கள் இன்னும் 100 கோடியில் பிளாட்களை வாங்குவார்கள்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பல கருத்துகளையும் பெற்று வருகிறது.