For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

லாரன்ஸ் பிஷ்னோயை என்கவுண்ட்டர் செய்பவருக்கு ரூ.1 கோடி சன்மானம் -  க்ஷத்ரிய கர்னி சேனா அறிவிப்பு!

12:42 PM Oct 22, 2024 IST | Web Editor
லாரன்ஸ் பிஷ்னோயை என்கவுண்ட்டர் செய்பவருக்கு ரூ 1 கோடி சன்மானம்    க்ஷத்ரிய கர்னி சேனா அறிவிப்பு
Advertisement

பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோயை என்கவுன்ட்டர் செய்பவருக்கு ரூ.1,11,11,111 சன்மானம் வழங்கப்படும் என  க்ஷத்ரிய கர்னி சேனா அறிவித்துள்ளது.

Advertisement

மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலைக்கு பொறுப்பேற்று, சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய்யை என்கவுண்டர் செய்யும் காவல்துறை அதிகாரிக்கு வெகுமதி அளிப்பதாக க்ஷத்ரிய கர்னி சேனை அமைப்பு அறிவித்துள்ளது. இதுகுறித்து க்ஷத்ரிய கர்னி சேனையின் தேசியத் தலைவர் ராஜ் ஷெகாவத், “லாரன்ஸ் பிஷ்னோய்யைக் கொல்லும் எந்த ஒரு காவல்துறை அதிகாரிக்கும் ரூ.1,11,11,111 வெகுமதியாக வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

க்ஷத்ரிய கர்னி சேனை அமைப்பு சன்மானம் அறிவித்தது ஏன்?

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதியன்று கர்னி சேனையின் தலைவர் சுக்தேவ் சிங் கோகமேடி, அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பல் அவரது கொலைக்கு பொறுப்பேற்று கொண்டது. இதனால் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட லாரன்ஸ் பிஷ்னோய், தற்போது குஜராத் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் மும்பையில் உள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே, துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கிலும் அவர் பெயர் குறிப்பிடப்பட்டது. ஆனால் மும்பை காவல்துறை அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

முன்னதாக, கடந்த அக்டோபர் 14-ம் தேதி, மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை, அவரது மகன் ஸீஷான் சித்திக்கின் அலுவலகத்துக்கு வெளியே இரவு மூன்று பேர் வழிமறித்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயமடைந்த அவர், உடனடியாகத் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்த வழக்கில், கொலையாளிகள் என சந்தேகிக்கப்படும் ஹரியானாவைச் சேர்ந்த குர்மைல் பல்ஜீத் சிங், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தர்மராஜ் ராஜேஷ் காஷ்யப் ஆகியோரை காவல் துறை, உடனடியாக கைது செய்தனர். பாபா சித்திக் கொலைக்கு முழு பொறுப்பேற்பதாக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.

Tags :
Advertisement