For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

செப்டம்பரில் ரூ.1.73 லட்சம் கோடி #GST வசூல்! கடந்தாண்டைவிட 6.5% அதிகம்!

09:45 PM Oct 01, 2024 IST | Web Editor
செப்டம்பரில் ரூ 1 73 லட்சம் கோடி  gst வசூல்  கடந்தாண்டைவிட 6 5  அதிகம்
Advertisement

கடந்த ஆண்டு செப்டம்பரில் ரூ.1.62 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலான நிலையில், இந்த ஆண்டு 6.5% அதிகரித்துள்ளது.

Advertisement

நடப்பாண்டு செப்டம்பரில் ரூ. ரூ.1.73 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் ரூ.1.62 லட்சம் கோடி வசூலான நிலையில் இந்தாண்டு 6.5% அதிகரித்துள்ளது. சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி மற்றும் செஸ் ஆகிய வரிகளின் மூலம் கிடைத்த வசூலும் கடந்த மாதம் அதிகரித்துள்ளது.

இதுவரை 2024 ஆம் ஆண்டின் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.10.9 லட்சம் கோடியாகும். இது கடந்த ஆண்டைவிட 9.5% அதிகம். 2023ஆம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் ரூ.9.9 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டது. அதுபோல இந்த ஆண்டு ஏப்ரலில் ரூ. 2.10 லட்சம் கோடி வசூலானது. 2023-2024 நிதியாண்டின் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.20.18 லட்சம் கோடியாகும். இது கடந்த நிதியாண்டோடு ஒப்பிடுகையில் 11.7% அதிகமாகும்.

கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டியால் வருவாய் சரியும் மாநிலங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பு தொகை வழங்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்தது.

Tags :
Advertisement