RRvsPBKS | சஞ்சு சாம்சன் தலைமையில் களம் காணும் ராஜஸ்தான்... பந்துவீச்சை தேர்வு செய்த பஞ்சாப் அணி!
18வது ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று(ஏப்ரல்.05) மாலை தொடங்கிய சென்னை - டெல்லி அணி இடையேயான போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்தது. இதையடுத்து ராஜஸ்தான் - பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி தொடங்கவுள்ளது. பஞ்சாபில் நடக்கவுள்ள இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியை சஞ்சு சாம்சன் தலைமை தாங்குகிறார்.
இப்போட்டிக்கான டாஸை வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ராஜஸ்தான் அணியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்(கேப்டன்) , நிதிஷ் ராணா, ரியான் பராக், துருவ் ஜூரெல்(விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மியர், ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மஹீஷ் தீக்ஷனா, யுத்வீர் சிங், சந்தீப் சர்மா ஆகியோர் விளையாடவுள்ளனர்.
அதே போல் பஞ்சாப் அணியில், பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), நேஹல் வதேரா, க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஷஷாங்க் சிங், சூர்யான்ஷ் ஷேட்ஜ், மார்கோ ஜான்சன், லாக்கி பெர்குசன், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் பிளேயிங்லெவனில் இடம்பெற்றுள்ளனர்.