Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

RRvsPBKS | அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால், பஞ்சாப் அணிக்கு 206 ரன்கள் இலக்கு!

பஞ்சாப் அணிக்கு எதிரான நடப்பாண்டு ஐபிஎல் லீக் சுற்றில் ராஜஸ்தான் அணி 206 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
09:34 PM Apr 05, 2025 IST | Web Editor
Advertisement

18வது ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று(ஏப்ரல்.05) சஞ்சு சாம்சன் தலைமயிலான ராஜஸ்தான் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமயிலான பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி பஞ்சாப்பில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற டாஸை வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது

Advertisement

ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் ஆகியோர் களமிறங்கி பவர்பிளேவில் அதிரடியாக விளையாடினர். இதில் சஞ்சு சாம்சன்  38 ரன்கள் எடுத்து லாக்கி பெர்குசனிடம் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து  ரியான் பராக் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கிடையே சீரான பார்ட்னர்சிப் அமைந்தது, இதையும் லாக்கி பெர்குசன் உடைக்க அதில்  அதிரடி காட்டி வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 67 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய நிதிஷ் ராணா 12 ரன்களில் ஜான்சனிடன் விக்கெட்டை இழந்தார். பின்பு ஷிம்ரான் ஹெட்மியர் - ரியான் பராக்  இணைந்து நிதானமாக விளையாடினர். இதில் தனது பங்கிற்கு 20 ரன்கள் அடித்து அர்ஷ்தீப் சிங்-கிடம் ஹெட்மியர் விக்கெட்டை பறிகொடுத்தார். களத்தில் நின்று டெத் ஓவர்களில் அதிரடி காட்டிய ரியான் பராக் 43* ரன்கள் அடித்தார். மொத்தமாக ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை குவித்தது. தொடர்ந்து பஞ்சாப் அணி 206 என்ற இலக்கை சேஸிங் செய்து வருகிறது.

Tags :
Punjab KingsRajasthan RoyalsRRvsPBKSsanju samsonShreyas lyeryashasvi jaiswal
Advertisement
Next Article