Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

24 மணிநேரத்திற்குள் 10 மில்லியன் #Subscriber - யூடியூபில் சாதனை படைத்தார் ரொனால்டோ!

09:58 PM Aug 22, 2024 IST | Web Editor
Advertisement

யூடியூப் சேனல் ஆரம்பித்த ரொனால்டோ, 24 மணி நேரத்தில் 20 மில்லியன் Subscriber-களை பெற்று சாதனை படைத்துள்ளார்.

Advertisement

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகளவில் கவனம் பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவர்.  கால்பந்து உலகில் பல சாதனைகளைப் படைத்துள்ள ரொனால்டோ, அதற்கு வெளியேயும் பல சாதனைகளைப் படைத்துள்ளார். அதிகமாக சம்பாதிக்கும் கால்பந்துவீரர்களில் ஒருவரான ரொனால்டோ, தற்போது இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்களைக் கொண்ட பிரபலமாகியுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்கள் கொண்ட விளையாட்டு வீரர் என்ற சாதனையை அவரிடம்தான் உள்ளது. தன்னுடைய கால்பந்து வாழ்க்கையின் கடைசிகாலத்தில் இருக்கிறார் ரொனால்டோ. இந்நிலையில் இப்போது அவர் யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கியுள்ளார். அதன் மூலம் அவர் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கவுள்ளார்.

இதையும் படியுங்கள் : பிறமொழிகளில் அனுப்பும் #VoiceNotes புரியவில்லையா? இனி கவலையில்லை - WhatsAppன் புதிய அப்டேட்!

UR christiano என்ற பெயரில் சேனல் தொடங்கிய அவர் அடுத்தடுத்து சில வீடியோக்களை பதிவேற்றினார். இந்நிலையில் அவர் சேனல் ஆரம்பித்த 90 நிமிடங்களில் அவரை ஒரு மில்லியன் பேர் சப்ஸ்க்ரைப் செய்துள்ளனர். அதன் மூலம் சேனல் ஆரம்பித்த ஒன்றரை மணிநேரத்தில் யூடியூபின் கோல்டன் பட்டனை அவர் பெற்றுள்ளார். தற்போது யூடியூப் சேனல் தொடங்கிய 24 மணி நேரத்தில் அவர் சேனலின் சப்ஸ்க்ரைபர் எண்ணிக்கை 20 மில்லியன் தாண்டியுள்ளது. யூடியூபில் விரைவாக 20 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை பெற்ற சேனல் என்ற சாதனையையும் படைத்தார்.

Tags :
20 millionChannelChristianoRecordronaldoRonaldoyoutubechannelsubscribersYoutube
Advertisement
Next Article