ரோகித், விராட் சிறப்பான ஆட்டம் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா ஆறுதல் வெற்றி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 46.4 ஓவர்களில் 236 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணியில் மேத்யூ ரென்ஷா அதிகபட்சமாக 56 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதனை தொடர்ந்து 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 38.3 ஓவர்களில் இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டகாரராக களமிறங்கிய கேப்டன் சுப்மன் கில் 26 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து ஜோடி சேர்ந்த விராட் கோலி-ரோகித் ஷர்மா இணை அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு வித்திட்டது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய ரோகித் 121 ரன்களும் விராட் கோலி 74 ரன்களும் அடித்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில்
இந்த போட்டியில் வெற்றி பெற்றாலும் ஒருநாள் தொடரை 2 - 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது குறிப்பிடடதக்கது.