Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

எந்த வீரருமே செய்யாத சாதனையை படைக்க உள்ளார், ரோகித் சர்மா...!

02:10 PM Jan 14, 2024 IST | Web Editor
featuredImage featuredImage
Advertisement

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இன்று நடைபெற உள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் களமிறங்குவதன் மூலம்எந்த வீரருமே செய்யாத சாதனையை படைக்க உள்ளார்

Advertisement

இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்கியது. இந்த தொடரின் முதல் ஆட்டம் பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்றது. இந்த கிரிக்கெட் தொடருக்காக ஆப்கானிஸ்தான் அணி இந்தியா வந்துள்ளது. டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்கு இரு அணிகளும் தயாராகும் வகையிலான தொடராக இந்த டி20 தொடர் அமையும் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : 'பழையன கழிதலும் புதியன புகுதலும்' - விழுப்புரத்தில் பிளாஸ்டிக் இன்றி போகி கொண்டாடிய மக்கள்...!

இதில் மொகாலியில் நடந்த 1- வது ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று (ஜன.14) மாலை 7 மணி அளவில் நடைபெற உள்ளது. மேலும், இன்று நடைபெற உள்ள ஆட்டத்திலும் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி தீவிரமாக உள்ளது.

இந்நிலையில்,  இன்று நடைபெறும் ஆட்டத்தில் ரோகித் சர்மா களம் இறங்குவதன் மூலம் புதிய உலக சாதனை ஒன்றை படைக்க உள்ளார். ரோகித் சர்மா இதுவரை 149 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.  இன்று நடைபெறும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது போட்டியில் ரோகித் களமிறங்கும்போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் உலகிலேயே 150 டி20 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைக்க உள்ளார்.

Tags :
AfganistanCricketrohitsharmaT20Cricket INDvsAFGTeamIndia
Advertisement