Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மீண்டும் டி20 கேப்டனாக ரோகித் சர்மா!

09:13 PM Jan 07, 2024 IST | Web Editor
Advertisement

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக  ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். 

Advertisement

ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் நடந்தது. இதில், இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து 2024 ஆம் ஆண்டிற்கான டி20 உலகக் கோப்பை தொடர் வரும் ஜூன் 1ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 20 அணிகள் விளையாட உள்ளன.

அதன்படி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் ரோகித் சர்மா, சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்‌ஷர் படேல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில், இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். ஜித்தேஷ் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags :
#INDvsAFG#Sports2024 T20 World CupafghanistanCricketIndiaNews7Tamilnews7TamilUpdatesRohit sharma
Advertisement
Next Article