Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தூத்துக்குடி குலசேகரப்பட்டினத்தில் ரோகினி ராக்கெட் ஏவுதளம் | மீனவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இஸ்ரோ எச்சரிக்கை!

09:33 PM Feb 27, 2024 IST | Web Editor
Advertisement

குலசேகரப்பட்டினத்தில் இருந்து ரோகினி ராக்கெட் ஏவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisement

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவுக்கு சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் மட்டுமே ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. அங்குதான் இந்தியாவின் செயற்கைக்கோள்கள் மற்றும் பல்வேறு உலக நாடுகளின் செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளன.

பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி, போன்ற ராக்கெட்டுகளின் உதவியோடு பல செயற்கைக்கோள்கள் இங்கிருந்து விண்ணில் ஏவப்படுகின்றன.

தற்போது நாட்டின் இரண்டாவது ஏவுதளத்தை அமைக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டிருக்கிறது. அதற்காக அவர்கள் தேர்வு செய்த இடம், தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினம்.

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி நூறு சதவீதம் நிறைவடைந்து விட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, இந்தத் திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்ட இருக்கிறார்.

மீனவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இஸ்ரோ எச்சரிக்கை!

துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், குலசேகரப்பட்டணம் இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) ஏவுதள வளாகத்தில் இருந்து, உத்சேமாக 28.02.2024 முதல் 29.02.2024 வரை (காலை 09.30 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை) அட்ச தீரக்க ரேகைகளிலிருந்து (Launch pad Coordinates: Latitude - 08° 22' North, Longitude - 78° 02' East) ஒரு ரோகினி ராக்கெட் (Rohini Sounding Rocket (RH-200)) ஏவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ஸ்ரீஹரிகோட்டா Satish Dhawan Space Centre, SHAR) தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நேர்வில் மணப்பாடு கலங்கரை விளக்கத்திற்கும், பெரியதாழை தூண்டில் பாலத்திற்கும் இடையிலான கடற்கரையிலிருந்து 10 கடல் மைல் (18 கிலோ மீட்டர்) வரை கடலுக்குள் விரிந்து கிடக்கும் பகுதிகள் ஆபத்தான பகுதியாக இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் (இஸ்ரோ) அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே 28.02.2024 முதல் 29.02.2024 ( காலை 09.30 மணி முதல் மாலை 02.00 மணி வரை மீனவர்கள் / பொதுமக்கள் சிறிய கப்பல்கள், மீன்பிடி படகுகள், மற்ற படகுகள், கட்டுமரம் வழியாக மேற்படி பகுதிக்குள் நுழைய வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

Tags :
ISROKulasekarapattinamtamil nadu
Advertisement
Next Article