ஆவடி அருகே துப்பாக்கி முனையில் நகைக்கடையில் ரூ.1.5 கோடி கொள்ளை - சிசிடிவி காட்சிகள் வெளியீடு!
05:05 PM Apr 15, 2024 IST 
                    | 
                            Web Editor
                
                 
    
                
                
     
            
    
             
            
        
         
    
      
    
                 Advertisement 
                
 
            
        சென்னை ஆவடி அருகே உள்ள முத்தாபுதுப்பேட்டையில் உள்ள நகைக்கடையில் ரூ.1.5 கோடி மதிப்பிலான நகை, பணம் கொள்ளையடிக்கபட்ட சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
                 Advertisement 
                
 
            
        திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகில் உள்ளது முத்தாபுதுப்பேட்டை. இப்பகுதியில் பிரகாஷ் என்பவர் கிருஷ்ணா ஜூவல்லரி எனும் பெயரில் நகைக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல இன்று கடையில் இருந்துள்ளார். இந்நிலையில், காரில் வந்த நான்கு மர்ம நபர்கள் திடீரென கடைக்குள் புகுந்து பிரகாஷை துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளனர்.
இந்நிலையில் குற்றவாளிகள் காரில் வந்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கொள்ளையர்களின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
 Next Article   
         
 
            