Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#RL25 | நாளை வெளியாகிறது #RaghavaLawrence நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

08:31 PM Oct 28, 2024 IST | Web Editor
Advertisement

ராகவா லாரன்ஸின் 25-வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகமான ராகவா லாரன்ஸ் அதன் பிறகு சில படங்களை இயக்கினார். அதனுடன் அவர் சில படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது அவர் அதிகாரம், துர்கா ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். ராகவா லாரன்ஸ் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியான படம் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் லாரன்ஸுடன் இணைந்து எஸ்.ஜே சூர்யா, நிமிஷா சஜயன் மற்றும் சஞ்சனா நட்ராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

அதனைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் 'பென்ஸ்' படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளார். மேலும், 'காஞ்சனா 4' பட பணியிலும் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே, சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற "கில்" படத்தின் தமிழ் ரீமக்கில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

https://twitter.com/AstudiosLLP/status/1850847504134189075

இந்த நிலையில், ராகவா லாரன்ஸ் நடிக்கும் 25 ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை (அக்டோபர் 29) காலை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கும் இந்த படத்தை நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு தற்காலிகமாக RL25 என பெயரிடப்பட்டுள்ளது.

Tags :
First Lookmovienews7 tamilraghava lawrenceRL25tamil cinema
Advertisement
Next Article