குட்டி ஹிட்மேனின் பெயரை வெளியிட்ட ரித்திகா சஜ்தே!
ரோகித் சர்மா, ரித்திகா தம்பதி இரண்டாவது குழந்தைக்கு "அஹான்" என பெயர் சூட்டியுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கும், அவரது மனைவி ரித்திகா சஜ்தேவுக்கும் இந்த மாத தொடக்கத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இதன் காரணமாகவே ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்கவில்லை. இந்த போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நவ.15ஆம் தேதி இந்த தம்பதிக்கு ஆண்குழந்தை பிறந்த நிலையில் தற்போது தங்கள் குழந்தையின் பெயரை தெரிவித்துள்ளனர். தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கிறிஸ்துமஸ் தீம் கொண்ட குடும்ப புகைப்படத்தில் ரித்திகா பெயரை வெளிப்படுத்தியுள்ளார். அந்த புகைப்படத்தில் ரோஹித்தை "ரோ" என்றும், ரித்திகாவை "ரிட்ஸ்" என்றும், அவர்களின் மகள் சமைராவை "சமி" என்றும், அவர்களுக்குப் பிறந்த மகனுக்கு "அஹான்" என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதன்மூலம் இதுதான் குழந்தையின் பெயராக இருக்கும் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் அதுதான் குழந்தையின் பெயர் என நேரடியாக இன்னும் கூறவில்லை. ரோஹித் மற்றும் ரித்திகாவின் முதல் குழந்தையான சமைரா 2018 இல் பிறந்தார். இரண்டாவது குழந்தை பிறந்ததால், பார்டர்-கவாஸ்கர் தொடரின் தொடக்க ஆட்டத்திற்கு பெர்த்துக்கு இந்திய அணியுடன் ரோஹித் செல்லவில்லை.