தமிழ்நாடு, கேரள எல்லையில் செயல்படாமல் உள்ள சோதனை சாவடி மையம் - #Nipahvirus பரவும் அபாயம்!
தமிழ்நாடு, கேரள எல்லையில் செயல்படாமல் உள்ள சோதனை சாவடி மையத்தால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 23 வயது
மாணவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவரின் மாதிரிகளை எடுத்து கேரளா
சுகாதாரத் துறையினர் புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.இந்நிலையில், தற்போது ஆய்வு முடிவுகளானது வெளியாகி உள்ள நிலையில், அந்த மாணவர் நிபா வைரஸ் தொற்றினால் உயிரிழந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த மாணவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தானாக முன்வந்து பரிசோதனைகளை
செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தலும் வழங்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்டை மாநிலங்களில் உள்ள எல்லைப் பகுதியில் அந்த மாநில அரசுகள் மூலம் நிபா வைரஸ் பரவல் தடுப்பு சோதனை சாவடி மையம் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணியும் தீவிர படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த நிபா வைரஸ் பரவல் தடுப்பு சோதனை சாவடி மையமும் தற்போது செயல்படாமல் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் நோய் தொற்று பரவும் அபாய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : திமுக பவள விழா | சென்னை #YMCA மைதானத்தில் ஏற்பாடுகள் தீவிரம்… 75000 பேர் அமரும் வகையில் வசதிகள்!
குறிப்பாக, கேரளாவில் நிபா வைரஸ் தொற்றானது தொடர்ந்து பரவி வரும் நிலையில், தென்காசி மாவட்டத்தில் சோதனை சாவடி மையம் மீண்டும் அமைக்கப்பட்டு கேரளாவில் இருந்து வரும் நபர்களை முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு தமிழ்நாடு எல்லைக்குள் அனுமதிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இதில் எந்த விதமான கவனமும் செலுத்தாமல் தமிழ்நாடு அரசும், தென்காசி மாவட்ட நிர்வாகமும் வேடிக்கை பார்க்கும் செயல் வேதனை தரும் செயலாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.