Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் #SitaramYechury -ன் உடல் தானம்!

05:06 PM Sep 12, 2024 IST | Web Editor
Advertisement

மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடலை, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

சீதாராம் யெச்சூரியின் குடும்பத்தினர் ஆந்திர மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். சீதாராம் யெச்சூரி 1952-ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். ஆந்திரா மற்றும் டெல்லியில் பள்ளிப் படிப்பை முடித்து, டெல்லி ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பட்டப்படிப்பை படித்தார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்ஏ முடித்த யெச்சூரி அவசர நிலை பிரகடனத்தின் போது கைது செய்யப்பட்டார்.1974-ம் ஆண்டு மாணவர் கூட்டமைப்பில் சேர்ந்த யெச்சூரி, 1975ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் யெச்சூரி செயல்பட்டார். மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அக்கட்சியின் பொதுச் செயலாளருக்கான தேர்தலில் வெற்றி பெற்று தற்போது மூன்றாவது முறையாக அந்த பொறுப்பை கவனித்து வந்தார்.

இந்நிலையில், நுரையீரல் தொற்று நோய் பாதிப்பால் கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சீதாராம் யெச்சூரி அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவர்களின் பராமரிப்பில் இருந்து வந்த அவரது உடல்நிலை கடந்த ஒரு சில நாட்களாக கவலைக்கிடமாக இருந்து வந்தது.

இதையும் படியுங்கள் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் #SitaramYechury காலமானார்!

கடந்த 20 நாட்களுக்கும் மேலாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு செயற்கை சுவாசக்கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சிகிச்சைப் பலனின்றி இன்று காலமானார்.

இந்நிலையில், மருத்துவ ஆராய்ச்சிக்காக மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்படும் என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

Tags :
AIIMSComradecpimDelhiGeneralSecretarymarxistNews7Tamilnews7TamilUpdatesRestinPeaceRIPSitaramYechurySitaramYechuryVeteranCPI
Advertisement
Next Article