Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.!

10:09 PM Jan 25, 2024 IST | Web Editor
Advertisement

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளான பவதாரிணி மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்தவர் பவதாரிணி. இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் ஆவார். இவர் இசையமைத்தது மட்டுமல்லாமல் சிறந்த பாடகராகவும் விளங்கி வந்தார்.

தமிழ் சினிமாவில் இருந்த மிக சொற்பமான பெண் இசையமைப்பாளர்களில் பவதாரிணியும் ஒருவர்.  இவர் பாரதி திரைப்படத்தில் இடம்பெற்ற  மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடல் இவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது.

இந்த சில நாட்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக இலங்கைக்கு சென்றுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பவதாரிணி அழகி, புதிய கீதை, கோவா, அனேகன் உள்ளிட்ட பல படங்களில் பாடல்கள் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளான பவதாரிணி மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

Tags :
இளையராஜாBhavathariniIlaiyarajaMusicnews7TamilUpdatesRIPRIPBhavatharani
Advertisement
Next Article