For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"சாதி, மதம் அற்றவர் சான்றிதழை வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை" - உயர்நீதிமன்றம் உத்தரவு!

05:01 PM Feb 01, 2024 IST | Web Editor
 சாதி  மதம் அற்றவர் சான்றிதழை வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை    உயர்நீதிமன்றம் உத்தரவு
Advertisement

"சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழை வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை" என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Advertisement

பெற்றோர் தங்களின் விருப்பப்படி, தாய் அல்லது தந்தை வழியில் சாதி மற்றும் மதச் சான்றிதழைப் பதிவு செய்து கொள்ளும் சுதந்திரம் நம் நாட்டில் உள்ளது. தமிழ்நாடு அரசின் வருவாய் துறை இதற்கான சான்றிதழை வழங்குகிறது. அதன்படி கடந்த 2022-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னை மேற்கு அண்ணா நகரை சேர்ந்த மனோஜ்  என்பவர் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் எனது மகன் யுவன் மனோஜை வரும் அக்டோபர் மாதம் பள்ளியில் சேர்க்கவுள்ளேன்.  எனவே எனது மகனுக்கு சாதி மதம் இல்லை என்று குறிப்பிட்டு சான்றிதழ் வழங்கக் கோரி அம்பத்தூர் வட்டாட்சியரிடம் விண்ணப்பித்தேன். ஆனால் அவ்வாறு சான்றிதழ் வழங்கப்படவில்லை .

எனவே எனது மகனுக்கு சாதி, மதம் அற்றவர் என்ற வகையில் சான்றிதழ் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார் . இந்த மனு நீதிபதி அப்தூல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது.  அப்போது அரசு வழக்கறிஞர் சான்றிதழ் வழங்க ஒப்புக்கொண்டதாக வட்டாட்சியர் அளித்த கடிதத்தை தாக்கல் செய்தார்.

இதையும் படியுங்கள்:  பெட்ரோல் டீசல் விலை குறைப்பு – எந்த அறிவிப்பு வெளியாகாததால் வாகன ஓட்டிகள் ஏமாற்றம்..!

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி அப்துல், மனுதாரருக்கு இரண்டு வாரங்களில் சாதி மதம் அற்றவர் என்று சான்றிதழ் வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார். சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து சாதி, மதம் இல்லை என்ற சான்றிதழ் மனுதாரருக்கு வழக்கு தொடர்ந்த 2 நாளில் வழங்கப்பட்டது. சாதி, மதம் இல்லை என்று சொல்பவர்கள் மத்தியில் இந்த சான்றிதழ் வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழ் வழங்க கோரி திருப்பத்தூர் வட்டாட்சியரிடம் விண்ணப்பித்துள்ளார். ஆனால், அந்த மனு மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனவே சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழை வழங்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று (பிப்.01) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம்,  "சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழை வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்க முடியாது. இந்த சான்றிதழை வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை என தீர்ப்பளித்தார்.

Tags :
Advertisement