வைரலாகும் ரெட்ரோவின் ‘கனிமா’ பாடல்!
‘ரெட்ரோ’ படத்தின் இரண்டாவது பாடலான 'கனிமா' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
05:38 PM Mar 22, 2025 IST | Web Editor
Advertisement
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ரெட்ரோ. இப்படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாகவும் நாசர், பிரகாஷ் ராஜ், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். ஆக்சன் கலந்த காதல் கதையாக உருவான இப்படம் மே 1ஆம் தேதி வெளியாகிறது.
Advertisement
இப்படத்தின் முதல் பாடலான கண்ணாடி பூவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், படத்தின் இரண்டாவது பாடலான, 'கனிமா' பாடலை படக்குழு நேற்று (மார்ச் 21) வெளியிட்டனர். விவேக் எழுதிய இப்பாடலை சந்தோஷ் நாராயணன் பாடியதுடன் சூர்யா, பூஜா ஹெக்டேவுடன் இணைந்து நடனமாடியும் அசத்தியிருந்தார்.
இந்நிலையில் இப்பாடலின் காட்சிகளை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.