Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மீண்டும் எகிறியது சில்லரை விலை பணவீக்கம்!... 14 மாதங்களில் இல்லாத உயர்வு!

11:07 AM Nov 13, 2024 IST | Web Editor
Advertisement

நாடு முழுக்க சில்லறை வர்த்தக பணவீக்கம் 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்து உள்ளது.

Advertisement

ஒவ்வொரு மாதமும், நாட்டின் சில்லறை வர்த்தக பணவீக்கம் உயர்ந்தும், குறைந்தும் காணப்படும். அந்த வகையில், அக்டோபர் மாதத்திற்கான நாட்டின் சில்லறை வர்த்தக பணவீக்கம் 6.21 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், கடந்த செப்டம்பர் மாதத்தில் 5.49 சதவீதமாக இருந்த சில்லறை வர்த்தக பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் அதிகரித்துள்ள நிலையில், இது கடந்த 14 மாதங்களில் இல்லாத பணவீக்க உயர்வு என்ற தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, ரிசர்வ் வங்கியால் நிர்ணயிக்கப்பட்ட உச்ச வரம்பான 6 சதவீதத்தை தாண்டி, சில்லறை வர்த்தக பணவீக்கம் 6.21 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதே போல், அக்டோபர் மாதத்தில் உணவுப்பொருட்கள் மீதான பண வீக்கம் 9.69 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், செப்டம்பர் மாதம் 9.24 சதவீதமாக இருந்த உணவுப்பொருட்கள் மீதான பண வீக்கம் தற்போது 9.69 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த பண வீக்கத்திற்கு, காய், கனிகள் மற்றும் உணவு பொருட்களின் விலை உயர்வு தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

Tags :
InflationRetail Inflation
Advertisement
Next Article