Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ராவின் பதவிபறிப்பு!

03:33 PM Dec 08, 2023 IST | Web Editor
Advertisement

திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

Advertisement

மக்களவையில் அதானி குழுமத்துக்கு எதிராக கேள்வி எழுப்ப,  தொழிலதிபா் தா்ஷன் ஹீராநந்தானியிடம் இருந்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கியதாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே புகாா் அளித்தாா்.

இந்தப் புகாரை விசாரிக்க மக்களவை நெறிமுறைகள் குழுவுக்கு ஓம் பிா்லா பரிந்துரைத்தாா்.  அதன்படி, நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு இதுகுறித்து விசாரித்து வந்தது.

தொடர்ந்து,  நெறிமுறைகள் குழு, மஹுவாவை எம்.பி. பதவியில் இருந்து நீக்க பரிந்துரைத்து அறிக்கை ஒன்றை தயார் செய்தது.  அந்த அறிக்கையை குழுவின் தலைவா் வினோத் குமாா் சோன்கா் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.  அப்போது அமளி காரணமாக பிற்பகலுக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது.

இன்று பிற்பகல் அந்த அறிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு,  மக்களவையில் இருந்து திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ராவை நீக்கம் செய்யும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு,  குரல் வாக்கெடுப்பு மூலமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து மக்களவையில் இருந்து திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா நீக்கப்பட்டதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.

எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் மஹுவா மொத்ரா தகுதிநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகளின் உறுப்பினர் வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து மக்களவை வரும் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tags :
Ethics PanelloksabhaMahua MoitraMahuaMoitraNews7Tamilnews7TamilUpdatesparliamentTMCWinter Session
Advertisement
Next Article