தமிழ்நாடு சட்டப்பேரவையில் வக்ஃப் மசோதாவிற்கு எதிராக தீர்மானம் தாக்கல்!
நாடு முழுவதும் 'வக்ஃப்' வாரிய சொத்துளை ஒழுங்குபடுத்த வழிவகுக்கும் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் கடந்த ஆகஸ்டில் அறிமுகம் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து மசோதாவை ஆய்வு செய்த நாடாளுமன்ற நிலைக் குழு, 655 பக்க அறிக்கை தயாரித்தது.
இதில் சில திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்த மசோதா தாக்கலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மசோதாவை மத்திய அரசு கைவிடக் கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அவரைத் தொடர்ந்து, சட்டப்பேரவை கட்சிகளின் உறுப்பினர்கள் தீர்மானத்தின் மீதான தங்களின் நிலைபாட்டை தெரிவித்து, பின்னர் வாக்கெடுப்பின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.