கழிப்பறை காகிதத்தில் ராஜிநாமா கடிதம் - முதலாளியை சிந்திக்க வைத்த ஊழியர்!
சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஏஞ்சலா யோஹ், LinkedIn சமூக வலைத்தளத்தில் கழிப்பறை காகிதத்தில் எழுதிக்கொடுத்த தனது பணியாளரின் ராஜிநாமா கடித்தத்தை பகிர்ந்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.
விரக்தியுடன் எழுதப்பட்ட அந்த ராஜிநாம கடிதத்தில், “இந்த நிறுவனம் என்னை எப்படி நடத்தியது என்பதற்கான அடையாளமாக இந்த வகையான காகிதத்தை எனது ராஜினாமாவிற்கு தேர்ந்தெடுத்துள்ளேன். நான் ராஜினாமா செய்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தது.
இது குறித்து அந்த தொழிலதிபர், “உங்கள் ஊழியர்கள் உண்மையிலேயே பாராட்டப்படுவதை உணர வைக்க வேண்டும். அவர்கள் வெளியேற முடிவு செய்து மனக்கசப்புடன் இல்லாமல் நன்றியுடன் வெளியேறுகிறார்கள். அதற்காக அவர்கள் விஸ்வாசமில்லாதவர்கள் என்று சொல்ல முடியாது. அது நிறுவனத்தின் பெருந்தன்மையை பேசும்.
பாராட்டு என்பது தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரு கருவி மட்டுமல்ல. ஒரு நபர் எவ்வளவு மதிக்கப்படுகிறார் என்பதற்கான பிரதிபலிப்பாகும். அவர்கள் செய்யும் செயல்களுக்காக மட்டுமல்ல, அவர்கள் யார் என்பதற்காகவும்தான். ஊழியர்கள் குறைவாக மதிப்பிடப்பட்டதாக உணர்ந்தால், சிந்திக்க வேண்டிய நேரம் இது. பாராட்டுதலில் சிறிய மாற்றங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதனால் இன்றே பாராட்ட தொடங்குங்கள்” என தன் அனுபவத்தை கூறியுள்ளார்.