பாஜகவின் அழுத்தத்தின் காரணமாக ராஜினாமா? - ராஜ்குமார் ஆனந்த் விளக்கம்!
பாஜகவின் அழுத்தத்தாலேயே ஆம் ஆத்மி கட்சியில் இருந்து ராஜ்குமார் ஆனந்த் விலகியதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் அடுத்தடுத்து சிறைக்கு அனுப்பப்பட்டனர். டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தொடங்கி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் என அடுத்தடுத்து அதிரடி கைது நடந்தது. இறுதியாக, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். 6 மாத சட்ட போராட்டத்திற்கு பிறகு, சஞ்சய் சிங்குக்கு சமீபத்தில் பிணை கிடைத்தது. ஆனால், மணீஷ் சிசோடியாவும் அரவிந்த் கெஜ்ரிவாலும் இன்னும் சிறையில்தான் உள்ளனர்.
இந்நிலையில் கட்சியின் கருத்துக்கு பதிலளித்த அவர்,
“அரசியல் மாறும் போது நாடு மாறும், என்று உருவான கட்சியில், அரசியல் மாறவில்லை. தலைவர்கள் தான் மாற ஆரம்பித்தனர். இதில் எனக்கு விருப்பமில்லை; கட்சியில் நடக்கும் அநீதியை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் விலகினேன்” என தெரிவித்துள்ளார்.