Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ரிசர்வ் வங்கிக்கு டிஜிட்டல் பரிமாற்ற விருது - பிரதமர் மோடி பாராட்டு!

லண்டன் மத்திய வங்கியின் டிஜிட்டல் பரிமாற்ற விருதுக்கு இந்திய ரிசர்வ் வங்கி தேர்வு செய்யப்பட்டு உள்ளதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
07:20 AM Mar 17, 2025 IST | Web Editor
லண்டன் மத்திய வங்கியின் டிஜிட்டல் பரிமாற்ற விருதுக்கு இந்திய ரிசர்வ் வங்கி தேர்வு செய்யப்பட்டு உள்ளதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Advertisement

லண்டன் மத்திய வங்கியின் டிஜிட்டல் பரிமாற்ற விருதுக்கு இந்திய ரிசர்வ் வங்கி தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதை ரிசர்வ் வங்கி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு உள்ளது.

Advertisement

அதன்படி, 'இந்திய ரிசர்வ் வங்கிக் குழுவால் உருவாக்கப்பட்ட பிரவாஹ் மற்றும் சார்த்தி அமைப்புகள் உள்ளிட்ட அதன் முன்முயற்சிகளுக்காக விருதும், அங்கீகாரமும் வழங்கப்பட்டு உள்ளது. இந்த டிஜிட்டல் முயற்சிகள் காகித பயன்பாட்டைக் குறைத்து, ரிசர்வ் வங்கியின் உள் மற்றும் வெளிப்புற செயல்முறைகளை மாற்றியிருப்பதை விருது குழு பாராட்டி உள்ளது' என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ரிசர்வ் வங்கிக்கு விருது வழங்கப்படுவதை பிரதமர் மோடி பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

"நிர்வாகத்தில் புதுமை மற்றும் செயல்திறன் மீதான முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் ஒரு பாராட்டத்தக்க சாதனை. டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் இந்தியாவின் நிதி சூழல் அமைப்பை தொடர்ந்து வலுப்படுத்தி, எண்ணற்ற உயிர்களை மேம்படுத்துகின்றன" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Digital Transformation AwardPM ModipraisesReceivesreserve bank
Advertisement
Next Article